சென்னை:சென்னை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் நேற்று அண்ணா சாலை, தேவநேய பாவாணர் நூலகத்தில் அரசுப் பள்ளியில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்குத் தனியார் அறக்கட்டளையின் சார்பாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள 20 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.25,000-க்கான காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன், இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர் மற்றும் பொது நூலக இயக்குநர் கே. இளம்பகவத், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா. மார்ஸ், ஆதவா அறக்கட்டளையின் தலைவர் பாலகுமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.