சென்னை:சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில்காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு கல்லூரி படிப்பு குறித்த ஆலோசனையும், கல்லூரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை வழங்கும் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுமாணவர்கள் மத்தியில் பேசினார். “உயர் படிப்புகளுக்கு செல்ல நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துவதால், தாய் மொழியான தமிழ் மொழியில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து இருக்கிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் கற்றுத் தருவதற்கான கல்வி மையங்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கற்றலில் ஆர்வம் செலுத்தி படித்து வந்தால் எந்த படிப்பை படித்தாலும் திறமையான ஆற்றலை வளர்த்துக் கொண்டு உயர்ந்த ஊதியத்தில், பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற முடியும்” என்றார்.