தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் - திமுக தலைமை அறிவிப்பு! என்ன காரணம்? - news in tamil

DMK Signature movement: நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் இன்று அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது - திமுக தலைமை அறிவிப்பு!
திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது - திமுக தலைமை அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 1:32 PM IST

சென்னை:நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் "நீட் விலக்கு, நம் இலக்கு" எனும் மாபெரும் கையெழுத்து இயக்கம் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து முதல் கையெழுத்திட்டார். இந்நிலையில், திமுக தலைமை, கையெழுத்து இயக்கம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், "நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில், இக்கையெழுத்து இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக, தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமம் முதல் பட்டணக்கரை கொண்டு சென்றிட ஏதுவாக, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், இன்று மாலை 6.30 மணி அளவில், தி.மு.க. கழகத்தின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் கழக அனைத்து அணிச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்" என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:திருவண்ணாமலை தான் திமுகவுக்கு திரும்பம் தந்தது.. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details