சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "வட மாநில மக்களை பொறுத்தவரையில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வந்ததால் விலைவாசி அதிகமானது. பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை அதிகமானது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நரேந்திர மோடி மீண்டும் வாய்ப்பு கேட்டு வருகிறார். மக்கள் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்து உள்ளனர். காங்கிரஸ் இந்தத் தேர்தலில் வெற்றிபெறும்.
'மத்தியில் ஆட்சி மாற்றம்... நீட் தேர்வு முழுமையாக ரத்தாகும்' - exam
சென்னை: மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
மேலும், நரேந்திர மோடி அரசு முடக்கிய திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்படும், வட மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் கலந்து பேசும்போது வியாபாரிகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று மாற்றத்தை எதிர்பார்த்து வருவதாகவும் தெரிவித்தனர். நீட் தேர்வால் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. மதிப்பின் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்பும் வாய்ப்பை மாணவர்களுக்கு உருவாக்குவோம். தமிழ்நாடு, புதுச்சேரியில் மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்த்து எறிந்து இருக்கிறார். மோடி மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.