தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

NEET Exam Results 2023; முதலிடம் பிடித்து தமிழ்நாடு மாணவர் பிரபஞ்சன் சாதனை..! - முதலிடம் பிடித்த மாணவர் பிரபஞ்சன்

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் மாணவர் பிரபஞ்சன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருன் சக்கரவர்த்தி ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 13, 2023, 9:23 PM IST

Updated : Jun 13, 2023, 10:23 PM IST

சென்னை: கடந்த மே 7ஆம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று (ஜூன் 13) வெளியிட்டது.
இந்த தேர்வு முடிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்து (NEET Exam Results TN Student Topper) சாதனை படைத்துள்ளார்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வு எழுதியிருந்தனர். இந்த நிலையில், இதன் முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று (ஜூன் 13) வெளியிட்டுள்ளது.

முதல் 50 இடங்களில் 6 பேர் தமிழர்கள்:தமிழகத்தை பொறுத்தவரை விண்ணப்பித்த ஒரு லட்சத்து 44 ,516 பேரில் 78 ஆயிரத்து 693 பேர் இந்த ஆண்டு நடந்த இந்த நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வில் முதல் 50 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 6 பேர் வந்துள்ளனர். கடந்த ஆண்டு 20 லட்சத்து 87 ஆயிரத்து 462 பேர் விண்ணப்பத்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சத்து 38,596 பேர் விண்ணப்பித்தனர். அந்த வகையில் 48,866 பேர் குறைவாக விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 'பிரபஞ்சன்' முதலிடம்:நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில், 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் இந்த ஆண்டு தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் (Prabhanjan J) மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருன் சக்கரவர்த்தி (Bora Varun Chakravarthi) ஆகியோர் இந்திய அளவில் நீட் தேர்வில் (All India toppers in NEET 2023) முதலிடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்த பிரபஞ்சன், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம், செஞ்சியில் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். இதனைத்தொடர்ந்து, மாணவர் பிரபஞ்சன் சென்னை வேலம்மாள் வித்யாலயம் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக இவரது தந்தை ஜெகதீஷ் பணியாற்றி வருகிறார். இன்று வெளிவந்த NEET தேர்வு முடிவில் மாணவர் பிரபஞ்சன் 720/720 மதிப்பெண் பெற்றுள்ளார். அத்தோடு, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மருத்துவர் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய தொகுப்பு முறைக்கு எதிர்ப்பு: டாக்டர்கள் சங்கம் கூறும் காரணம் என்ன?

Last Updated : Jun 13, 2023, 10:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details