தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்கு 15,93,452 பேர் விண்ணப்பம் - 15,93,452 people applied to write NEET Exam

சென்னை: இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வினை எழுதுவதற்கு 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் எனவும், தமிழ்நாட்டிலிருந்து 1 லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுதுவதற்கு 15,93,452 பேர் விண்ணப்பம்
நீட் தேர்வு எழுதுவதற்கு 15,93,452 பேர் விண்ணப்பம்

By

Published : Jan 14, 2020, 2:25 PM IST

மேலும் ஏழாம் தேதி மாணவர்கள் கட்டணங்களைs செலுத்தினர். இந்நிலையில் தேசிய தேர்வு முகமை நீட் தேர்விற்கு விண்ணப்பம் செய்து கட்டணம் செலுத்தியவர்களின் விவரத்துடன் கூடிய தகவலை அளித்துள்ளது. அதில் மகாராஷ்டிராவிலிருந்து இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 829 மாணவர்களும், உத்தரப்பிரதேசத்திலிருந்து ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 705 மாணவர்களும், ராஜஸ்தானிலிருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 மாணவர்களும், கர்நாடகாவிலிருந்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 629 மாணவர்களும், தமிழ்நாட்டிலிருந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 மாணவர்களும், கேரளாவிலிருந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 10 மாணவர்களும் என 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மேலும், இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டு விண்ணப்பத்தில் முக்கியமாக மாணவர்களின் 12ஆம் வகுப்பு தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும். இந்தாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பதிவு எண்கள் தற்போது அளிக்கப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பதிவு எண்கள் அரசுத் தேர்வுத்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் பள்ளியிலிருந்து பெற்று மாணவர்கள் பதிவுசெய்ய உள்ளனர். நீட் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மே மாதம் மூன்றாம் தேதி நீட் தேர்வு மதியம் இரண்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை மூன்று மணி நேரம் 720 மதிப்பெண்களுக்கு நடைபெற உள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடந்து முடிந்தது காவல் உதவி ஆய்வாளருக்கான தகுதித் தேர்வு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details