நவராத்திரி விழாவையொட்டி, பிரதமர் மோடியின் சாதனைகளைக் குறிப்பிடும் வகையில், சென்னை தி. நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் "சாதனை கொலு" அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனை கொலுவை மாநில பாஜக தலைவர் எல். முருகன் தொடங்கிவைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
'அரசுப் பள்ளி மாணவன் சாதனை; நீட் வேண்டாம் எனச் சொன்னவர்களுக்குப் பதிலடி!'
சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து சய்ய முடியாது என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டின நிகழ்வு, டெல்லியில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை, ஆவாஸ் யோஜனா மற்றும் மக்கள் பயன்படுத்தும் திட்டம் என அனைத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்தக் கொலுவானது அமைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் அரசுப் பள்ளியில் படித்து சாதனை படைத்த தமிழ்நாட்டு மாணவருக்கு வாழ்த்துகள். நீட் தேர்வில் திரிபுரா போன்ற மாநிலங்களில் தேர்வு முடிவில் ஏற்பட்ட குளறுபடி சிறிய குளறுபடிதான், எல்லா தேர்வுகளிலும் குளறுபடி இருக்கும்.
அதற்காக பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்ய முடியுமா? நீட் தேர்வை தமிழ்நாட்டில் ரத்து செய்ய முடியாது.
தமிழ்நாடு அரசு நீட் பயிற்சி மையங்களை அதிகரித்து பயிற்சியை மேம்படுத்த வேண்டும். அரசுப் பள்ளி மாணவர் சாதனை படைத்திருக்கிறார், நீட் வேண்டாம் எனச் சொன்னவர்களுக்கு இது பதிலடி.
நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் விசாரணையின் முடிவில்தான் தெரியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.