நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கிவரும் சவிதா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறி சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தொடரும் நீட் ஆள்மாறாட்ட புகார் - சென்னை மாணவி கைது! - neet exam forgery latest news
சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் சவிதா மருத்துவக் கல்லூரி மாணவி பிரியங்காவையும், அவரது தாயையும் சிபிசிஐடியினர் கைது செய்துள்ளனர்.
neet
கைது செய்யப்பட்டவர்களை தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து தென்மண்டல எஸ்.வி. விஜயகுமார் இருவரிடமும் தீவிர விசாரணை செய்துவருகிறார்.நீட் ஆள் மாறாட்டம் செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே ஐந்து மாணவர்களை கைதாகியுள்ள நிலையில், தற்போது ஆறாவதாக மாணவி பிரியங்காவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: ஜாமீன் மனு ஒத்திவைப்பு!