2018இல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகச் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையின்ர விசாரித்துவந்த நிலையில் தனுஷை கைதுசெய்து விசாரனை நடத்திவருகின்றனர்.
இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்த, இரண்டு பேரை சிபிசிஐடி காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
மருத்துவ மாணவன் தனுஷுக்காக, பிகாரில் இந்தி மொழியில் தேர்வெழுதி வெற்றிபெற்ற நபர் குறித்தும், விசாரணை நடைபெறுகிறது. மாணவன் தனுஷுக்கு பெங்களூருவைச் சேர்ந்த தனியார் பயிற்சி மையம் உடந்தையாக இருந்ததாகத் தெரிகிறது.