சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து பிரித்து தனியார் பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கூட்டமைப்பின் பொருளாளர் கனகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம் என பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. தொழில்நுட்பத்திற்காக ஐஐடி மத்திய அரசால் தனியாக இயக்கப்படுகிறது.
தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்க கோரிக்கை: சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு - chennai
சென்னை: தமிழகத்தில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தனியாக உருவாக்க வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்க கோரிக்கை
தமிழகத்தில் ஆரம்பத்தில் சென்னை பல்கலைக்கழகம் மருத்துவம், வேளாண்மை, சட்டம் ஆகியவற்றிற்கான படிப்புகளை அளித்து வந்தது.
வளர்ந்து வரும் காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பக் கல்விக்கு அண்ணா பல்கலைக் கழகம் தனியாக உருவாக்கப்பட்டது. ஆனால் அண்ணா பல்கலைகழகத்திற்கு அதனை மேம்படுத்த போதுமான நேரம் இல்லாததால் தனியார் பொறியியல் கல்லூரிக்கு தனியாக ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.