சென்னை: தமிழ் திரையுலகில் விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக, ஒரு ஆண்டில் பல படங்களில் நடித்து வருபவர் ஜீ.வி.பிரகாஷ். இவர் கைவசம் தற்போது 10 படங்களுக்கு மேல் உள்ளன. ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள அடங்காதே படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.
அடங்காதே படத்தின் பாடல் வெளியீடு! - chennai news
ஜீ.வி.பிரகாஷின் அடங்காதே படத்தின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
அடங்காதே
இதில் அவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரில்லர் கலந்த அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தின் முதல் பாடலான “நீ இன்றி நானா” பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பும் வரவுள்ளது.