தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சென்னையில் தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் தொற்று அதிகமாகப் பரவிவருகிறது.
இருப்பினும், குணமடைந்தோரின் விழுக்காடு அதற்குச் சரிசமமாக உள்ளது. மேலும் இந்தப் பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டுவருகின்றது. இந்த நிலையில் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது.
சென்னையில் இதுவரை மொத்தம் 99 ஆயிரத்து 794 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 85 விழுக்காடு அதாவது, 84 ஆயிரத்து 916 நபர்கள் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். எஞ்சி உள்ள 12 ஆயிரத்து 765 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் இரண்டாயிரத்து, 113 நபர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
20 முதல்29 வயது வரையிலான நபர்களே அதிகமாக கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. சென்னையில் கரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரி நிலைப் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி,
கோடம்பாக்கம் - 11,599 பேர்
அண்ணா நகர் - 11,444 பேர்
ராயபுரம் - 11,237 பேர்
தேனாம்பேட்டை - 10,817 பேர்
தண்டையார்பேட்டை - 9,523 பேர்