சென்னை:தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு போக்குவரத்து துறையின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு பகுதியாக 2,100 சிறப்பு பேருந்துகளும் இன்றும் (அக் 23) இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் (அக் 21,22) 7,208 பேருந்துகளில் மொத்தம் 3,96,440 பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து 2 நாட்களில் 3,96,440 பயணிகள் வெளியூருக்கு பயணம்
சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் 3,96,440 பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து இரண்டு நாட்களில் 3,96,440 பயணிகள் பயணம்
மேலும் இதுவரை 1,77,532 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக அதிகளவிலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றதால், இன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. அதேநேரம் அதே அளவிலான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமமின்றி தங்களது பயணத்தைத் தொடங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க:பெங்களூரு மற்றும் கொச்சுவேலிக்கு தீபாவளி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே