தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 85.80 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி! - சென்னை மாநகராட்சி கல்வித்துறை

சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வெழுதியவர்களில் 85.80 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) சங்கர்லால் குமார் தெரிவித்துள்ளார்.

 85.80 percent students pass 12th exams in Chennai
85.80 percent students pass 12th exams in Chennai

By

Published : Jul 16, 2020, 5:09 PM IST

இதுதொடர்பாக மாநகராட்சி இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அதில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஆயிரத்து 675 மாணவர்கள், இரண்டாயிரத்து 973 மாணவியர்கள் என மொத்தம் நான்காயிரத்து 648 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர்.

இதில் ஆயிரத்து 306 மாணவர்களும் இரண்டாயிரத்து 682 மாணவியர்களும் என மொத்தம் மூன்றாயிரத்து 988 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, தேர்ச்சி விழுக்காடு 85.80 ஆக உள்ளது.

கணினி அறிவியல் பாடத்தில் 6 மாணவ, மாணவியர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர் மேலும் 6 மாணவ, மாணவியர்கள் 550 க்கும் மேல் மதிப்பெண்களும், 53 மாணவ, மாணவியர்கள் 500 க்கு மேல் மதிப்பெண்களும், 219 மாணவ, மாணவியர்கள் 450-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இவ்வரிசையில், மேற்கு மாம்பலம் சென்னை மேல்நிலைப் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details