சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள், முகக்கவசம் அணியாதவர்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில், முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாயும், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களிடமிருந்து 500 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படுகிறது.
2 நாளில் 2 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்த சென்னை மாநகராட்சி!
சென்னை : மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கடந்த இரண்டு நாள்களில் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாயை அபராதமாக மாநகராட்சி அலுவலர்கள் வசூலித்துள்ளனர்.
அதிகபட்சமாக உடற்பயிற்சி, சலூன் போன்ற இடங்களில் அரசாங்க விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் 5,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
இந்நிலையில், செப்டம்பர் 13, 14 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் மொத்தமாக ஒரு கோடியே 93 லட்சத்து 42 ஆயிரத்து 262 ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர். குறிப்பாக நேற்று (செப்.13) மட்டுமே ஒரு கோடியே 90 லட்சத்து 85 ஆயிரத்து 62 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், தாசில்தார் மூலம் நேரடியாக வசூலிக்கப்பட்டது 13,24,250 ரூபாய் ஆகும்.