சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பால் வணிகத்தில் ஈடுபட்டுவரும் பால் முகவரும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில பொருளாளருமான காமராஜின் கடையில் இருந்து தினசரி சுமார் 50 லிட்டர் வரை பாலினை திருடப்பட்டு கண்ணம்மா பேட்டையில் உள்ள ஒரு மளிகை கடைக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், தினமும் இந்தத் திருட்டை செய்துவந்த பாலாஜி என்பவரை நேற்று அதிகாலையில் கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.