தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகாபலிபுரத்தில் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம்!! - udhayanidhi stalin

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று (ஜூன் 9) சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெராட்டன் கிராண்ட்(Sheraton grand) நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.

பன்மடங்கு பாதுகாப்பு மத்தியில் இன்று நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம்!!
பன்மடங்கு பாதுகாப்பு மத்தியில் இன்று நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம்!!

By

Published : Jun 9, 2022, 8:03 AM IST

தமிழ் சினிமா நட்சத்திரங்களான நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் இன்று (ஜூன் 9) சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெராட்டன் கிராண்ட்(Sheraton grand) நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.

இந்த திருமணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விஜய் சேதுபதி,மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாபலிபுரத்தில் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லையாம். மேலும் இத்திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு கைபேசி பயன்படுத்த அனுமதியில்லை என்று கூறப்படுகிறது. திருமண விழாவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பவுன்சர்கள் 80க்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மகாபலிபுரத்தில் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம்

திருமணம் நடைபெறும் கடற்கரை விடுதியின் முன்புறம், கடற்கரைப் பகுதி, பின்புறம் என அனைத்து இடத்திலும் ரசிகர்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது என்பதற்காகவும், புகைப்படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காகவும் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மண்டபத்தின் உள்ளேயும் விருந்தினர்கள் யாரும் புகைப்படம் எடுத்துவிடாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க: Watch Video: என் தங்கச்சி நயன்தாராவிற்கு கல்யாணம்..! - கூல் சுரேஷ்

ABOUT THE AUTHOR

...view details