தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமண ஏற்பாடு ... கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ''நோ'' சொன்ன நயன்தாரா! - Cannes Film Festival

சர்வதேச திரைப்பட விழாவான 75ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தாண்டு தமிழ்நாடு திரைப்பிரபலங்கள் ஏ.ஆர் ரஹ்மான், நயன்தாரா, மாதவன், தமன்னா ஆகியோருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

திருமண தீவிர ஏற்பாடு ... கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நோ சொன்ன நயன்தாரா
திருமண தீவிர ஏற்பாடு ... கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நோ சொன்ன நயன்தாரா

By

Published : May 17, 2022, 10:31 PM IST

சென்னை:ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கென்று சர்வதேச சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி மரியாதை உண்டு. இந்த திரைப்பட விழாவில் கலந்துகொள்வதும், தங்களின் படம் அந்த திரைப்பட விழாவில் திரையிடப்படுவதும் சர்வதேச திரைக்கலைஞர்களின் கனவாக இருந்துவருகிறது.

75ஆவது கேன்ஸ் திரைப்பட விழா இன்று மே 17ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதிவரை நடக்கிறது. இதில் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் ட்ரெய்லரும் திரையிடப்படுகிறது. இதற்காக இருவரும் பிரான்ஸ் சென்றுள்ளனர்.

மேலும் ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாரா, தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோருக்கு, கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கும் அடுத்த மாதம் 9ஆம் தேதி திருமலை - திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்தது. இதன் ஏற்பாடுகளை கவனித்து வருவதால் கேன்ஸ் பட விழாவில் நயன்தாரா பங்கேற்கவில்லை எனக் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க:'கேன்ஸ்' பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்

ABOUT THE AUTHOR

...view details