தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பர்களுக்காக நண்பர்களே சேர்ந்து எடுத்த 'நட்பே துணை' டிரைலர்! - நடிகை அனகா

இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில், சுந்தர்.சியின் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'நட்பே துணை' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

natpe thunai

By

Published : Mar 1, 2019, 11:45 AM IST

இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில், சுந்தர்.சியின் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'நட்பே துணை' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இயக்குநர் சுந்தர்.சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில், கதாநாயகனாக ஹிப்ஹாப் தமிழா ஆதியும், நடிகையாக அனகாவும் நடித்துள்ள படம் 'நட்பே துணை'.

இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ள இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இவ்விழாவில், ஹிப் ஹாப் தமிழா ஆதி, நடிகை அனகா, ஹரிஷ் உத்தமன், இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு, படக்குழுவினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியதாவது:

'நட்பே துணை' எனக்கு இரண்டாவது படம். நான் முதலில் தயாரிப்பாளர் சுந்தர். சி-யிடம் எனது நண்பர்களை வைத்து ஒரு படம் பண்ணலாம் என்று கேட்டேன், உடனே அவர் ஒப்புக்கொண்டு எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார், அதற்கு நன்றி.

இந்தப் படத்திற்காக ஐஐடியில் இருந்து ஒரு பயிற்சியாளரை அமர்த்தினார்கள். அவரிடம் ஹாக்கி ஸ்டிக் கை பேட் என்று கூறினேன். அதற்கு என்னை இரண்டு முறை கிரவுண்டை சுற்றி வரச் சொன்னார். இப்படித்தான் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமானது.

தினமும் காலை ஆறு மணி முதலே ஹாக்கி பயிற்சியை எடுக்க ஆரம்பித்தோம். அப்பொழுதுதான் ஹாக்கி விளையாடுவது எவ்வளவு கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். இந்தப் படம் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நண்பர்களுக்காக எடுத்த படம். கண்டிப்பாக இந்தப் படம் வெற்றி அடையும் என்றார்.

அவரைத்தொடர்ந்து, தயாரிப்பாளர் சுந்தர்.சி. பேசும்போது, 'இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது இந்த அளவுக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால் நான் மூன்று மெகா தொடர்களை எடுத்து விட்டேன். படங்கள் என்றால் 'கலகலப்பு 2','வந்தால் ராஜாவாதான் வருவேன்' ஆகிய படங்கள் எல்லாம் முடித்துவிட்டேன்.

ஆனால் 'நட்பே துணை' மட்டும் ரிலீஸ் செய்ய முடியவில்லை. தாமதமானதற்குப் படக்குழுவினர் காரணமல்ல, படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அவர்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டனர்.

அதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. நான் இயக்கும் படங்களில் கருத்து சொல்லமுடியவில்லை, காமெடி ஆகவே சென்று விட்டது. ஆனால், இப்போது நான் தயாரிக்கும் படங்களில் நல்ல கருத்துகளை சொல்வதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த கதையில் எனக்கு பிடித்தது என்னவென்றால் புதுச்சேரியை மையமாக வைத்து நகரும் இந்தக் கதையில் புதுச்சேரியில் இருப்பவர்கள் எப்படியாவது ஃபிரான்சில் சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசையோட இருக்கும் ஒரு ஹீரோவின் கதைதான் 'நட்பே துணை'.

இந்தப் படத்தில் காதல், சென்டிமென்ட், நகைச்சுவை, எமோஷனல் எல்லாம் இருக்கு. நான் ஆதியிடம் கூறியது ஒன்றுதான், அது பாடல்கள் அருமையாக வர வேண்டும் என்று கேட்டேன். 'மீசையை முறுக்கு' படத்தைப் போன்று பாடல்கள் அனைத்தும் அற்புதமாக வந்திருக்கிறது.

ஆவ்னி மூவீசுக்கு ஒரு கிரீடமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல் இந்தப் படம் வந்திருக்கிறது' என்று தெரிவித்தார்.

இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு பேசுகையில், “அபிநந்தன் போன்ற ஒரு கேரக்டரை நான் வேறு விதமாக இந்தப் படத்தில் காட்டி உள்ளேன். இந்தப் படத்தில் பத்து பேர் நேஷனல் பிளேயர்ஸ் இருக்கிறார்கள். மற்ற 20 பேருக்கு பயிற்சி கொடுத்தோம்.

ஹாக்கி விளையாட்டு என்பது 91 மீட்டர் 35 நிமிடங்கள் விளையாட வேண்டும். இது புரொபஷனல் விளையாட்டு வீரர்களுக்கே சவாலான விஷயம்.

படப்பிடிப்பின்போது யாராவது ஒருவருக்கு அடிபட்டு கொண்டே இருக்கும்.
தினமும் ஒரு மருத்துவர், தண்ணீர் லாரி உடன்தான் படப்பிடிப்பு நடத்தப்படும். ஹீரோ, ஹீரோயினுக்கு அடிபட்டாலும், தங்கள் கடின உழைப்பால் படம் நன்றாக வரக் காரணமாக இருந்தனர்” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details