தமிழ்நாடு

tamil nadu

அதிமுகவை பின்னுக்குத் தள்ளிய திமுக... எதில் தெரியுமா?

By

Published : Oct 10, 2019, 5:29 PM IST

தேசிய அளவில் பணக்கார மாநில அரசியல் கட்சிகள் பட்டியலில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளான திமுக இரண்டாம் இடத்தையும், அதிமுக மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

திமுக - அதிமுக

ஜனநாயக கூட்டமைப்பு சீர்த்திருத்த அமைப்பு (Association for Democratic Reforms) சார்பாக பணக்கார மாநில கட்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாஜி கட்சி ரூ.583.12 கோடி சொத்துமதிப்புடன் முதல் இடத்திலும், தமிழ்நாட்டின் திமுக ரூ.191.64 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக ரூ.189.54 கோடி சொத்துமதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதனைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மாநில அரசியல் கட்சிகளால் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் சொத்துவிவரங்கள் அடிப்படையில் ஜனநாயக கூட்டமைப்பு சீர்த்திருத்த அமைப்பு இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. அதன்படி திமுகவைப் பொறுத்தவரை 2016 - 17ஆம் ஆண்டில் இருந்த சொத்துமதிப்பை விட 2017 -18 ஆம் ஆண்டில் 4.5 % அதிகரித்துள்ளது, அதிமுகவிற்கு 2016 -17 வருடத்தில் இருந்த சொத்துமதிப்பை விட 2017 -18 ஆம் ஆண்டில் 1 % அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: மகாராஷ்டிராவில் சோட்டா ராஜன் தம்பிக்கு தொகுதி ஒதுக்கீடு - இந்திய குடியரசுக் கட்சி முடிவு!

ABOUT THE AUTHOR

...view details