மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று(டிசம்பர்-8) பாரத் பந்த் அழைப்பு விடுத்து நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.