தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய வாக்காளர் தினம் கொண்டாட்டம்! - கரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வினியோகம்

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் கரோனா விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய வாக்காளர் தினம் கொண்டாட்டம்!
தேசிய வாக்காளர் தினம் கொண்டாட்டம்!

By

Published : Jan 25, 2022, 11:45 AM IST

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பெயர் சேர்ப்பு விழிப்புணர்வு, தேர்தலில் ஜனநாயக கடமையாற்றும் பொறுப்பு, மாற்றுத்திறனாளி வாக்காளருக்கான சிறப்பு வசதிகள் குறித்து இந்நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தேசிய வாக்காளர் தினத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் இளம் வாக்காளர்களை அழைத்து அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட உள்ளது.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக வடிவமைத்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வாக்காளர் பெயர் சேர்க்கவும், வாக்காளராக உள்ளவர் ஓட்டளிப்பதும் உரிமை மற்றும் கடமை என்று விளக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ்களில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் விதத்தில் சமூக இடைவெளி பின்பற்றல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இந்த நோட்டீஸ்கள் மாவட்டங்கள் தோறும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இதையும் படிங்க:India corona cases: நாட்டின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது

ABOUT THE AUTHOR

...view details