இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்குத் தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி இரவு 11.50 மணி வரையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
இறுதி நாளான இன்று அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இருந்தபோதிலும் பலர் விண்ணப்பம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசியத் தேர்வு முகமை, நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதியை ஜனவரி 6ஆம் தேதி இரவு 11.50 மணி வரை நீட்டித்துள்ளது.