இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
2018ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்களை நேரடியாக இணையதளத்தின் மூலம் வரும் ஜூன் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.