சென்னை:இந்தியாவில் வேலைக்கு செல்லும் இளைஞர்களை விட வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தான் அதிகளவில் உள்ளது. அதுமட்டுமின்றி எஸ்எஸ்எல்சி(SSLC) முடித்தவர்களில் இருந்து பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை தற்போது அரசு வேலையை எதிர்நோக்கியே காத்திருக்கின்றனர்.
மேலும், பலர் குடும்ப சூழல் காரணமாக படிப்புக்கு ஏற்ற வேலைக்கு செல்லாமல் ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் வேலைக்கு செல்கின்றனர். அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்காக அதுவும், 10ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும் மத்திய அரசில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
மத்திய அரசின் உளவுத்துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant), வாகனப் போக்குவரத்து கண்காணிப்பாளர் ( Motor Transport Executive) மற்றும் பல்நோக்கு பணியாளர்(Multi Taskins Staff) ஆகிய வேலைகளுக்கு 677 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. குறிப்பாக சென்னைக்கு என செக்யூரிட்டி அசிஸ்டெண்ட் மற்றும் மோட்டர் டிரான்ஸ்போர்ட் எக்சிக்யூட்டிவ் பணிக்கு 9 இடங்களும், பல்நோக்கு பணியாளர் பணிக்கு என 14 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பணி இடங்கள் குறித்த விவரங்கள்:
- பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant), வாகன போக்குவரத்து கண்காணிப்பாளர் ( Motor Transport Executive) பணிக்கு சுமார் 362 பணியிடங்கள்
- ஊதியம் - ரூ.21, 700 - 69,100
- தகுதி - குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி
- விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிடச் சான்றிதழ் இணைக்க வேண்டும்
- விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மொழி பேசத் தெரியவேண்டும்
பல்நோக்கு பணியாளர்(Multi Taskins Staff):
- இதில் சுமார் 315 காலி பணியிடங்கள்
- ஊதியம் - ரூ.18,000 - 56,900 வரை
- வயது வரம்பு - 18 - 25
- கல்வித் தகுதி - 10ஆம் வகுப்பு தேர்ச்சி
- விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிடச் சான்றிதழ் இணைக்க வேண்டும்
- விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மொழி பேசத் தெரியவேண்டும்.