கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலியாக பணிபுரியும் பொதுமக்கள் பலருக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நியாய விலைக் கடைகளில் இலவசமாக கூடுதலாக அரிசி, அத்தியாவசிய பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து இந்தப் பொருட்களை கள்ளச் சந்தைகளில் அதிக விலைக்கு விற்பதற்காக, ரேசன் அரிசியை பதுக்கியும், கடத்தி சென்று விற்பவர்கள் மீது, அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடை சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மேலும், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் கள்ளசந்தை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வு துறை டிஜிபி பிரதீப் வி பிலீப் தெரிவித்துள்ளார்.