சென்னை: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின், இன்று (மார்ச் 1) தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கொண்டாடும் இரண்டாவது பிறந்தநாள் இதுவாகும். இவரது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் கொண்டாங்களை கடந்த வாரமே தொடங்கிவிட்டனர்.
இன்று (மார்ச்.1) சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்கள் வந்து பங்கேற்க உள்ளனர்.