சென்னை : சென்னையில் மூன்று இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திரு.வி.க. நகரில் முர் ரகுமான் என்பவரது வீட்டிலும், நீலாங்கரையில் புஹாரி என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் கோவையிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜி.எம். நகர் உள்ளிட்ட 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உக்கடம் குக்கர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகே, அதிகாலையில் கோட்டைமேட்டில் இருந்து டவுன்ஹால் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்தது. விபத்துக்குள்ளான கார் இரண்டு துண்டாக உடைந்தது. காரை ஓட்டி வந்த உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார்.