சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வின் பாடத் திட்டத்தினை குறைத்து தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் nta.ac.in எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, கரோனா காலக்கட்டத்தில் சிபிஎஸ்சிஇ மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. கரோனா காலக் கட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
அடுத்த வருடம் நீட் தேர்வுக்கு தயாராக இருப்பதால், கடந்த காலங்களில் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு வினாத்தாள் அமைக்கப்பட உள்ளன. ஆதலால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வு பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.