சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வு முடிவுகள், கடந்த 12ஆம் தேதி வெளியானது. இதில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக மாணவர்களுக்கு முடிவுகள் ஏதும் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
பொறியியல் மாணவி தற்கொலை: காவல் கண்காணிப்பாளர் விளக்கமளிக்க நோட்டீஸ்! - அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வு முடிவுகள்
கடலூர் மாவட்டம், வடலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி சந்தியா உயிரிழந்தது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாட்களில் பதிலளிக்குமாறு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தநிலையில், கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த சந்தியா என்கிற மாணவி, ஏப்ரல் 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவர், தேர்வு முடிவுகள் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் எழுந்தன.
இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத்துக்கு சமூக ஆர்வலர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதில் அடுத்த 15 நாட்களுக்குள் தற்கொலை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு, தேசிய மகளிர் ஆணையம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.