செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கவிஷ்கா என்னும் சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய ரூ. 5 லட்சம் தேவைப்பட்டது. அவரது தந்தை கார்த்திக் பண உதவி கிடைக்காமல் மிகுந்த வேதனையில் தவித்து வந்தார். இதையடுத்து நந்தம்பாக்கம் காவல்துறை குற்றப்பிரிவு ஆய்வாளர் தங்கராஜ், காவலர் செந்தில்குமார், காவல் நிலையத்தில் பணிபுரிந்தவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து ரூ. 5 லட்சம் திரட்டி உதவியிருக்கின்றனர்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், சிறுமி காப்பாற்றப்பட்டு வீடு திரும்பியுள்ளார். குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய இந்த இரு காவல்துறை அலுவலர்களின் சேவையைப் பாராட்டி காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.