தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர் சேர்க்கைக்கு ரூ.5 ஆயிரம் கேட்ட விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் - National commission for scheduled caste

சென்னை: அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.5 ஆயிரம் கேட்ட விவகாரத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

By

Published : Oct 29, 2020, 11:53 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவரை 11ஆம் வகுப்பில் சேர்க்க ரூ.5 ஆயிரம் கேட்ட விவகாரம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, கோயம்புத்தூர் மாவட்ட பட்டியலின சமுதாய அமைப்புகளின் கூட்டு குழு ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், இவ்விவகாரம் தொடர்பாக 15 நாட்களுக்குள் உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details