தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூரில் பழமையான நடராஜர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது

தஞ்சாவூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பழமையான நடராஜர் சிலையைப் பறிமுதல் செய்தனர்.

natarajar-statue-worth-rs-30-lakh-was-recovered-by-police 30 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற நடராஜர் சிலை மீட்பு மூவர் கைது தஞ்சாவூரில் பழமையான நடராஜர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது
natarajar-statue-worth-rs-30-lakh-was-recovered-by-police 30 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற நடராஜர் சிலை மீட்பு மூவர் கைதுதஞ்சாவூரில் பழமையான நடராஜர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது

By

Published : Apr 16, 2022, 7:30 PM IST

சென்னை:சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளியின் உத்தரவுப்படி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் நேற்று (ஏப்ரல்.15) மதியம் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பைபாஸ் கும்பகோணம் செல்லும் சாலை சந்திப்பில் தீவிர வாகனத்தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று இருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம், ராஜகிரி கரைமேடு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (27), பைசல் அகமது (27), சாகுல் அமீது (26) எனத் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

நடராஜர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது

அப்போது அவர்கள் பழமையான நடராஜர் சிலையை விற்பதற்காக வைத்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து நடராஜர் உலோக சிலையானது திருவாச்சியில் 21 சுடருடனும் அதிலும் 13ஆவது சுடர் அறுத்தும் எடுக்கப்பட்ட நிலையிலும் சுமார் 3/4 அடி உயரமும் 1 கிலோ எடையும்கொண்ட சிலையைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலை சுமார் 30 லட்சத்திற்கு விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மூவர் மீதும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், துரிதமாகச் செயல்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த பழமையான சிலையை மீட்ட சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 600 ஆண்டுகால பழமையான மூன்று சிலைகள் மீட்பு - பின்னணி என்ன?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details