சென்னைதிருமுல்லைவாயலில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு சுமார் 100 நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் ஆவடியை சேர்ந்த ரிடெயின்ஸ் ஸ்மைல் என்ற தொண்டு நிறுவனம் இங்குள்ள நரிக்குறவர் இன மக்களுக்காக 2022 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கணவன், மனைவி, பிள்ளைகள் என குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாடை வழங்கி இசை, நடனப் போட்டி மற்றும் ஆடை அலங்கார நடை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட நரிக்குறவர் பெண்கள் ஒரே விதமான புடவை அணிந்து ஆடை அணிவகுப்பு போட்டியில் ஒய்யார நடை நடந்து வந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
நரிக்குறவர் இன மக்களின் மகிழ்ச்சியான புத்தாண்டு விழா அதேபோல் திரைப்படப் பாடலுக்கு ஜோடியாக நடனமாடி அசத்தினர். அவர்களுடன் ரீடென்யின்ஸ் ஸ்மையில் தொண்டு நிறுவன உரிமையாளர் ராகுல் போரா இணைந்து கேக் வெட்டி 2022 புத்தாண்டை கொண்டாடினர்.
நரிக்குறவர் இன மக்களின் மகிழ்ச்சியான புத்தாண்டு விழா மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கிலோ அரிசி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய நரிக்குறவ மக்கள், சமூகத்தில் தங்களைப் பலர் ஏற்க மறுக்கும் நிலையில் இந்த ஆண்டு தங்களையும் சக மனிதர்கள் போல் நினைத்து புத்தாண்டு கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினர்.
இதையும் படிங்க:சமநிலை தவறும் கோபம் எப்படியிருக்கும்?; எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் 'வலிமை'!