தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை நாட்டைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பல் தலைவன் சென்னையில் கைது! - இலங்கை நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பல் தலைவன் கைது

சென்னை: இலங்கை நாட்டைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பல் தலைவன் மற்றும் அவனது கூட்டாளியை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Sri Lankan drug gang leader
Sri Lankan drug gang leader

By

Published : Jan 22, 2021, 4:15 PM IST

தூத்துக்குடி அருகே 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டு படகை காவல் துறையினர் பிடித்தனர். அதிலிருந்து 100 கிலோ ஹெராயின், 18 கிலோ மெத்தபெட்டமைன், துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பல் தலைவன் நவாஸ், அவனது கூட்டாளி முகமது அஃப்னாஸ் ஆகிய இருவரும் சென்னை அருகே காராப்பாக்கம் என்கிற பகுதியில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள்

இதையடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கடந்த 10 ஆண்டுகளாக முறையான பாஸ்போர்ட் இல்லாமல் இவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சென்னையிலிருந்து தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைத்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் அனுப்பும் பணியை இவர்கள் மேற்கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட படகு

ABOUT THE AUTHOR

...view details