முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, முதலமைச்சார் நாரயணசாமி பேசுகையில், "புதுச்சேரியில் கரோனா வைரஸ் பாதுகாப்பு தடை உத்தரவால் வியாபாரிகள் அமைப்புசாரா தொழிலாளர்கள், பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு, கரோனா உதவித் தொகையாக அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும். இது அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்" என்றார்.