தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைத்தேர்லில் அமோக வெற்றி: அதிமுக தலைமையகத்தில் கொண்டாட்டம்! - நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு

இடைத்தேர்லில் அமோக வெற்றி: அதிமுக தலைமையகத்தில் கொண்டாட்டம்!

By

Published : Oct 24, 2019, 7:39 AM IST

Updated : Oct 24, 2019, 9:57 PM IST

18:24 October 24

இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி: தலைமையகத்தில் கொண்டாட்டம்!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள தலைமையகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கிகொண்டாடினர்.

15:43 October 24

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி

காங்கிரஸ் கைவசமிருந்த நாங்குநேரியை அதிமுக கைப்பற்றியுள்ளது. இதில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாரயணன் 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர்  ரெட்டியார்பட்டி நாராயணன் 93 ஆயிரத்து 802 வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்  61 ஆயிரத்து 991 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகளைப் பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இதில் திமுக வேட்பாளர் புகழேந்தி 68 ஆயிரத்து 646 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.

15:14 October 24

நாங்குநேரியில் 18ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 82,445 வாக்குகளும், காங்கிரஸ் 54,107 வாக்குகளும், நாம் தமிழர் 2,898 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 28,338 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

15:08 October 24

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல் 21ஆம் தேதி நடைபெற்றதை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1,13,766 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 68,842 வாக்குகளும் பெற்றுள்ளனர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

15:01 October 24

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 32,811 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். 

14:49 October 24

அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன்

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். 

14:47 October 24

நாங்குநேரி தொகுதியில் 17ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 77,435 வாக்குகளும், திமுக 51,779 வாக்குகளும், நாம் தமிழர் 2,796 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 25,656 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். 

14:34 October 24

நாங்குநேரி தொகுதியில் 16ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 72,346 வாக்குகளும், காங்கிரஸ் 48,939 வாக்குகளும், நாம் தமிழர் 2,622 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 23,407 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

14:22 October 24

நாங்குநேரி தொகுதியில் 15ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 68,517 வாக்குகளும், காங்கிரஸ் 46,726 வாக்குகளும்,  நாம் தமிழர் 2,448 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 21,791 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

14:01 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் 20ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக  1,09,338 வாக்குகளும், திமுக 68,632 வாக்குகளும், நாம் தமிழர் 2,910 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 44,775 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

13:45 October 24

நாங்குநேரி தொகுதியில் 12ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 56,168 வாக்குகளும், காங்கிரஸ் 38,633 வாக்குகளும்,  நாம் தமிழர் 2015 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 17,535 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

13:31 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் 19ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 1,09,338 வாக்குகளும், திமுக 66,170 வாக்குகளும், நாம் தமிழர் 2,823 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 43,168 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

13:30 October 24

நாங்குநேரி தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 17 வாக்குகளும், காங்கிரஸ் 19 வாக்குகளும், நாம் தமிழர் 6 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

13:19 October 24

நாங்குநேரி தொகுதியில் 11ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 52,613 வாக்குகளும், காங்கிரஸ் 35,420 வாக்குகளும்,  நாம் தமிழர் 1,825 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 17,193 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

13:09 October 24

நாங்குநேரி தொகுதியில் பத்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 47,654 வாக்குகளும், காங்கிரஸ் 32,190 வாக்குகளும், நாம் தமிழர் 1,704 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 15,464 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

13:06 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் 18ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 1,03,676 வாக்குகளும், திமுக 63,136 வாக்குகளும், நாம் தமிழர் 2709 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 40,540 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. 

12:58 October 24

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன்

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் அமோக வெற்றி பெற்றுள்ளார். 

12:55 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் 17ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 98,444 வாக்குகளும், திமுக 59,175 வாக்குகளும், நாம் தமிழர் 2,605 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 39,269 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

12:53 October 24

நாங்குநேரி தொகுதியில் ஒன்பதாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 42,728 வாக்குகளும், காங்கிரஸ் 29,194 வாக்குகளும், நாம் தமிழர் 1584 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 13,534 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

12:44 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் 16ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 92,955 வாக்குகளும், திமுக 55,301 வாக்குகளும், நாம் தமிழர் 2,321 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 37,654 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

12:33 October 24

நாங்குநேரி தொகுதியில் எட்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 39,497 வாக்குகளும், காங்கிரஸ் 24,595 வாக்குகளும், நாம் தமிழர் 1,331 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 14,902 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். 

12:30 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் 15ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 88,003 வாக்குகளும், திமுக 52,393 வாக்குகளும், நாம் தமிழர் 2170 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 35,610 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றது. 

12:21 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் 14ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 81,439 வாக்குகளும், திமுக 49,077 வாக்குகளும், நாம் தமிழர் 2,042 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 32,362 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

12:17 October 24

நாங்குநேரி தொகுதியில் ஏழாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 33,803 வாக்குகளும், காங்கிரஸ் 21,100 வாக்குகளும், நாம் தமிழர் 1,124 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 12,703 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
 

12:08 October 24

அதிமுக தொடர்ந்து இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதை அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் வரவுள்ளார். 

12:06 October 24

நாங்குநேரி தொகுதியில் ஆறாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக 29,392 வாக்குகளும், காங்கிரஸ் 18,373 வாக்குகளும், நாம் தமிழர் 936 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 11,019 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

12:00 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் 13ஆவது சுற்று முடிவில் அதிமுக 75,867 வாக்குகளும், திமுக 46,283 வாக்குகளும், நாம் தமிழர் 1,887 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 29,584 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 
 

11:49 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் 12ஆவது சுற்று முடிவில் அதிமுக 69,808 வாக்குகளும், திமுக 42,835 வாக்குகளும், நாம் தமிழர் 1,786 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 26,973 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். 

11:46 October 24

நாங்குநேரி ஐந்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக 24,268 வாக்குகளும், காங்கிரஸ் 15,555 வாக்குகளும், நாம் தமிழர் 766 வாக்குகளும், நோட்டா 264 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 8,713 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். 

11:38 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் 11ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக 64,429 வாக்குகளும், திமுக 39,231 வாக்குகளும், நாம் தமிழர் 1,669 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 25,198 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். 

11:37 October 24

நாங்குநேரி தொகுதியில் நான்காவது சுற்று முடிவில் அதிமுக 19,871 வாக்குகளும், காங்கிரஸ் 12,071 வாக்குகளும், நாம் தமிழர் 578 வாக்குகளும், நோட்டா 216 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 7,800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். 

11:31 October 24

விக்ரவாண்டி தொகுதியில் பத்தாவது சுற்று முடிவில் அதிமுக 58,153 வாக்குகளும், திமுக 35,618 வாக்குகளும், நாம் தமிழர் 1488 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 22,535 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

11:29 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்பதாவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 51,786 வாக்குகளும், திமுக வேட்பாளர் 31,859 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் 1,316 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 19,927 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

11:29 October 24

நாங்குநேரி தொகுதியில் மூன்றாவது சுற்று முடிவில் அதிமுக 9,381 வாக்குகளும், காங்கிரஸ் 6,348 வாக்குகளும், நாம் தமிழர் 274 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 3,033 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

11:12 October 24

காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்.

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது மன்சூரிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்.

11:07 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் 8ஆவது சுற்று முடிவுப்படி அதிமுக 44,960 வாக்குகளும், திமுக 28,254 வாக்குகளும், நாம் தமிழர் 1,165 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 16,706 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். 

11:02 October 24

நாங்குநேரி தொகுதியில் இரண்டாவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 9,381 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 6,348 வாக்குகளும், நாம் தமிழர் 274 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 3,033 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

11:00 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் ஏழாவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 39,654 வாக்குகளும், திமுக 24,454 வாக்குகளும், நாம் தமிழர் 1,002 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 15,400 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். 

10:40 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் ஆறாவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 33,401 வாக்குகளும், திமுக வேட்பாளர் ரூபி மனோகரன் 20,502 வாக்குகளும், நாம் தமிழர் 852 வாக்குகளும் பெற்றுள்ளனர். முத்தமிழ்ச்செல்வன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரூபி மனோகரனை விட 12,872 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

10:40 October 24

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளதை அடுத்து, அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

10:35 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் ஐந்தாவது சுற்று முடிவில் அதிமுக 27,318 வாக்குகளும், திமுக 16,963 வாக்குகளும், நாம் தமிழர் 696 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 10,355 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.  
 

10:20 October 24

இனிப்புகள் வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்

நாங்குநேரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதத்தை அடுத்து தற்போது இரண்டாவது சுற்று தொடங்கியுள்ளது. 

10:15 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் நான்காவது சுற்று முடிவில் அதிமுக 21,298 வாக்குகளும், திமுக 13,307 வாக்குகளும், நாம் தமிழர் 502 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 7991 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 
 

10:14 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் மூன்றாவது சுற்று முடிவில் அதிமுக 16,046 வாக்குகளும், திமுக 10,035 வாக்குகளும், நாம் தமிழர் 366 வாக்குகளும் பெற்றுள்ளனர். 6011 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது. 

10:09 October 24

நாங்குநேரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதம்

10:06 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவின்படி அதிமுக 11,382 வாக்குகளும், திமுக 6,938 வாக்குகளும், நாம் தமிழர் 221 வாக்குகளும் பெற்றுள்ளனர். 4,444 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது. 

10:02 October 24

நாங்குநேரி தொகுதியில் முதல் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 4,407 வாக்குகளும், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் 2,275 வாக்குகளும் பெற்றுள்ளனர். 2,312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது. 
 

09:53 October 24

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வெற்றி. 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார். 

காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14,782 வாக்குகளும், என்.ஆர்.காங் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,612 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் பிரவீனா 121 வாக்குகளும், ஏஐஎம்கே வேட்பாளர் கோவிந்தராஜ் 121, பிஎல்பி வேட்பாளர் பார்த்தசாரதி 61 வாக்குகளும், சுசி கம்யூனிஸ்ட் வேட்பாளர் லெனின் துரை 294 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் வெற்றிச்செல்வன் 343 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

09:43 October 24

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 4200 வாக்குகளும், திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 2,959 வாக்குகளும் பெற்றுள்ளனர்.   

09:36 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் முதல் சுற்று இறுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 5312 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 3265 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 102 வாக்குகளும், தனித்து போட்டியிட்ட இயக்குநர் கவுதமன் 21 வாக்குகளும் பெற்றுள்ளனர். 2047 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.   

09:25 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 5,766 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

09:20 October 24

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 4,200 வாக்குகள் பெற்று முன்னிலை 

09:08 October 24

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

09:05 October 24

விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் தொடர்ந்து முன்னிலை 

09:02 October 24

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 943 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை 

09:00 October 24

08:47 October 24

விக்கிரவாண்டி தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

08:47 October 24

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்து மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணப்படுகிறது. முதலில் தபால் வாக்கும், பின்னர் மின்னணு இயந்திர வாக்குகளும் எண்ணப்படுகிறது. இறுதியாக ஐந்து வாக்குச்சாவடிகளில் உள்ள விவிபேட் இயந்திரங்கள் சரி பார்க்கப்படும்.

08:38 October 24

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்து மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணப்படுகிறது. முதலில் தபால் வாக்கும், பின்னர் மின்னணு இயந்திர வாக்குகளும் எண்ணப்படுகிறது. இறுதியாக ஐந்து வாக்குச்சாவடிகளில் உள்ள விவிபேட் இயந்திரங்கள் சரி பார்க்கப்படும்.

08:21 October 24

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்து மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணப்படுகிறது. முதலில் தபால் வாக்கும், பின்னர் மின்னணு இயந்திர வாக்குகளும் எண்ணப்படுகிறது. இறுதியாக ஐந்து வாக்குச்சாவடிகளில் உள்ள விவிபேட் இயந்திரங்கள் சரி பார்க்கப்படும்.

08:15 October 24

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் 56 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.

08:05 October 24

நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, முதலாவதாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

07:50 October 24

பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  

07:17 October 24

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரங்கள் உடனுக்குடன்!

தமிழ்நாட்டின் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

Last Updated : Oct 24, 2019, 9:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details