தமிழ்நாட்டில் காலியாக இருந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இரண்டு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றிபெற்றது.
முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள்! - Nanguneri
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றிபெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
![முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4870488-thumbnail-3x2-cm.jpg)
நாங்குநேரி, விக்கிரவாண்டி எம்எல்ஏக்கள் முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து!
நாங்குநேரி, விக்கிரவாண்டி எம்எல்ஏக்கள் முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து!
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனும் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும் வெற்றிபெற்றனர். இதனையடுத்து இன்று இருவரும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இவர்கள் இருவரும் வரும் 29ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்கவுள்ளனர்.