மதுரை: சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, இவரின் தந்தை ஆனந்தன். தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு முன்பு ஜுன் 23 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில் நந்தினி, அவரின் தந்தை ஆனந்தன் இருவரையும் ஜுன் 20 ஆம் தேதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.