சென்னை: உலகையே உலுக்கிய கரோனா தொற்றினால் கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிய நிலையில், அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் தீவுத்திடலில் 'நம்ம ஊரு திருவிழா' இன்று (மார்ச். 21) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் கட்டைக்கூத்து, கொம்பு இசை, பெரிய மேளம், மகுடம், துடும்பு மேளம்,பம்பை மேளம், நையாண்டிமேளம், தோல்பாவைக் கூத்து, சிலம்பாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், மரக்காலாட்டம், தீ சாகசம் போன்ற சாகச கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.