தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரைவில் மெரினாவில் அமையவுள்ள ’நம்ம சென்னை’ எழுத்து வடிவம்! - Namma Chennai script to be placed at Marina beach

சென்னை : மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் ’நம்ம சென்னை’ எழுத்து வடிவம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டார்.

மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் ’நம்ம சென்னை’ எழுத்து வடிவம் அமைக்கும் பணிகள்
மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் ’நம்ம சென்னை’ எழுத்து வடிவம் அமைக்கும் பணிகள்

By

Published : Sep 17, 2020, 10:42 PM IST

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் பெயர்களைக் கொண்டு 'ஐ லவ் கோவை', 'ஐ லவ் திருச்சி' போன்ற எழுத்து வடிவத்தை மாவட்டங்களின் பிரபலமான பூங்காக்கள் அல்லது பிரபலமான வேறு இடங்களில் அமைத்து வருகின்றனர்.

இந்த எழுத்துக்களின் முன்பு நின்று செல்ஃபி புகைப்படங்கள், காணொலிகள் எடுத்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் அந்தந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சி பொங்க பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சென்னையில், மெரினா கடற்கரையில் ’நம்ம சென்னை’ என்ற எழுத்து வடிவம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி, ’ஸ்டார்ட் இந்தியா’ எனும் அமைப்புடன் இணைந்து மெரினா கடற்கரையில் ’நம்ம Chennai’ எனும் எழுத்து வடிவத்தை அமைக்கும் பணிகளைத் தொடங்கியது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் இன்று (செப் 17), இப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க :மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் ’நம்ம சென்னை’ எழுத்து வடிவம் அமைக்கும் பணிகள்

ABOUT THE AUTHOR

...view details