சென்னை:அண்ணா பல்கலைக்கழகம் 2022 - 2023 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பி.இ, பி.டெக், பி.ஆர்க். எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்.சி.ஏ ஆகிய தொழில் கல்விப்படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகத்தின் விதிமுறைகளின் படி, தகுதியான பேராசிரியர்கள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணாப் பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கிடையில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான இணைப்பு நீட்டிப்பிற்கு விண்ணப்பம் செய்த 476 கல்லூரிகளில், நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் 225 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான குறைபாடுகள் உள்ளது. 62 கல்லூரிகள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையில் குறைபாடுடன் உள்ளன. தகுதியற்ற முதல்வர்களைக் கொண்டு 23 கல்லூரிகள் செயல்படுகின்றன. 166 கல்லூரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாக குறைபாடுகள் உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில், 225 கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லாமலும், ஆய்வகங்களில் போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது.