சென்னை: கடந்த 7 ஆம் தேதி ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மாநகர பேருந்து, பெயர் பலகை மீது மோதியதில் தூண் சரிந்து விழுந்து அங்கு சென்று கொண்டிருந்த சண்முக சுந்தரம் மீது விழுந்து உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சண்முக சுந்தரத்திற்கு, கடந்த 5 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவருக்கு ராதிகா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் தங்கி, சைதாப்பேட்டையில் ஐஸ்கிரீம் விநியோகிக்கும் பணியை செய்து வந்துள்ளார்.
சென்னையில் பெயர் பலகை விழுந்து விபத்து இவரது மாத வருமானம் குறைவு என்பதால், அடிக்கடி குடும்பத்தைப் பார்க்க செல்லாமல் சண்முக சுந்தரம் தவிர்த்து வந்துள்ளார். இதனிடையே கடந்த முறை ஊருக்குச் சென்றபோது, மகனுக்கு மொட்டை அடிக்கும் நிகழ்ச்சிக்காக குலதெய்வ கோயிலுக்கு சென்று நடத்த வேண்டும் என அவரது மனைவி கூறியுள்ளார்.
இதனால் சண்முகசுந்தரம், ஊருக்குச் செல்லாமல் அதற்காக பணத்தை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையப் பெயர்ப்பலகை சாலையில் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!