தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாமக பிரமுகர்கள் மிரட்டுகிறார்கள் - டிஜிபி அலுவலகத்தில் பெண் புகார் - பெண் புகார்

பட்டியலின சமூகத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டதால் பாமக பிரமுகர்களின் தூண்டுதலின் பேரில் தனது குடும்பத்தினர் மீது பொய் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் மிரட்டுவதாக பெண் ஒருவர் குடும்பத்தினருடன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பாமக பிரமுகர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் பெண் புகார்
பாமக பிரமுகர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் பெண் புகார்

By

Published : Oct 29, 2021, 8:17 PM IST

சென்னை: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கவிதா என்பவர் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது பாமக கட்சியினர் பொய் புகார் அளித்து அவர்களின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் மிரட்டுவதாக டிஜிபி அலுவலகத்தில் இன்று (அக்.29) புகார் அளித்தார்.

புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, " என் கணவர் கனகராஜ் நாமக்கல் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து, சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இரு சமூகத்திற்கிடையே ஏற்பட்ட பிரச்னையின் போது என் கணவர் தட்டிக்கேட்டு பட்டியலின சமூகத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டதால் பாமக கட்சியினரை சேர்ந்த சீனி மற்றும் சங்கர் ஆகியோருடன் முன் விரோதம் ஏற்பட்டது.

பாமக பிரமுகர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் பெண் புகார்

இதனையடுத்து அவர்கள் அளித்த பொய் புகாரின் பேரில் மல்லசமுத்திரம் காவல் ஆய்வாளர் குலசேகரன், உதவி ஆய்வாளர் கைலாசம் ஆகியோர் தனது கணவர் கனகராஜ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக மிரட்டுகின்றனர். என் வீட்டில் உள்ளவர்களையும் மிரட்டுகின்றனர்.

இதற்கு பயந்து வீட்டை காலி செய்துவிட்டோம். என் மகன், மகளின் படிப்பு பாதிக்கிறது" என புகார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா பரப்புரை வாகனத்தில் சென்று தேவர் சிலைக்கு சசிகலா மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details