மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக ஜூலை 25ஆம் தேதி முதல் பரோலில் வந்துள்ள நளினிக்கு மேலும் மூன்று வாரங்கள் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பரோல் நீட்டிப்பு வரும் 15ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், அக்டோபர் 15ஆம் தேதிவரை பரோல் நீட்டிப்பு வழங்கக்கோரி நளினி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நளினியின் பரோலை நீட்டிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி! - சென்னை உயர்நீதிமன்ற செய்திகள்
சென்னை: பரோலை நீட்டிக்க கோரிய நளினியின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
nalini-parole-case-dismissed
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஆர்.எம். டீக்காராமன் அமர்வு, ஏற்கனவே நளினி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதால் ஒரு மாத பரோலும், பின்னர் மூன்று வார பரோல் நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய காரணங்களைக் கூறி பரோல் கேட்பதை ஏற்கமுடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பில், வழக்கை திரும்பப் பெறுவதாக கூறியதால், வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.