ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசித்துவரும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தனது தூக்கு தண்டணையை ஆயுள் தண்டனையாக தமிழ்நாடு அரசு 2000ஆம் ஆண்டு குறைத்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழ்நாடு அரசு விடுதலை செய்துள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.
ஆயுள் தண்டனை கைதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு சிறை நிர்வாகத்தால் பரோல் மறுக்கப்பட்டுள்ளது.