தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரோலை நீட்டிக்க அரசு பரிந்துரைக்க வேண்டும்: நளினி வழக்கறிஞர் கோரிக்கை - நளினி பரோல் செய்திகள்

சென்னை: மகளின் திருமண நிகழ்விற்காக சிறையிலிருந்து வெளிவந்த நளினியின் பரோல் இம்மாதம் 25ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், பரோலின் கால அளவை ஒரு மாதம் நீட்டிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என நளினியின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நளினி வழக்கறிஞர்

By

Published : Aug 17, 2019, 5:29 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘இதுவரை இந்தியாவில் நன்னடத்தையை கருத்தில் கொண்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். யாரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை கேட்டு முடிவெடுத்ததில்லை. பஸ் எரிப்பு வழக்கில்கூட பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கேட்டு குற்றவாளிகள் விடுதலை செய்யப்படவில்லை. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்கள் ஏழு பேரை விட மிகப்பெரிய தவறு செய்த பலர் குறைந்தபட்ச தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல் பாகுபாடின்றி இவர்கள் எழுவரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நளினி வழக்கறிஞர்

மேலும், தமிழ்நாடு அரசு எழுவர் வழக்கில் நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய முன்னதாகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி அவர்களது விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என அரசு வலியுறுத்த வேண்டும். எனவே, அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்க நடவடிக்கைகள் எடுக்கவும், விரைவில் நளினி உள்ளிட்டோரை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details