சென்னை:முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நளினி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற அதிகாரம் போல உயர் நீதிமன்றம் விடுதலை உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு இன்று (ஜூன்.17) தீர்ப்பு அளித்தது. மேலும், உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளனர்.
விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களை சந்தித்த நளினி தரப்பு வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "ஏற்கனவே இந்த கோரிக்கையுடன் ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்து தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு என கூறி தள்ளுபடி செய்துள்ளார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லை என்று இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளது தவறு. உயர் நீதிமன்றத்துக்கு தான் வானளாவிய அதிகாரம் உள்ளது. 7 பேரில் ஒருவரை விடுதலை செய்துவிட்டீர்கள், என்னை விடுதலை செய்யாமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். வெகு விரைவில் உச்சநீதிமன்றம் செல்வோம். நளினி விடுதலை செய்யப்படுவார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி