சென்னையில் ஜூன் மாதம் 26ஆம் தேதி குடிபோதையில் இளைஞர் ஒருவர் பணியில் இருந்த காவல்துறையினரிடம் தகாத வார்த்தைகளால் திட்டி, சண்டையிட்டார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவியது. இதனையடுத்த அந்த நபர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் தமிழ்நாடு சட்டப்பேரவை நீதிமன்றங்கள் மற்றும் சிறைக்காவல்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் என தவறாக வீடியோ பரவியது.
இதனையடுத்து, அமைச்சர் சி.வி.சண்முகம் இந்த தவறான வீடியோவால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற வீடியோ பரப்புவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். இதன் அடிப்படையில் காவல் ஆணையர் உத்தரவின்படி குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவி விசாரணை மேற்கொண்டு வந்தது.