விருதுநகர் தனியார் கல்லூரி பேராசிரியையானநிர்மலா தேவி கல்லூரிமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பானவிவகாரத்தில் ஆளுநர் அலுவலகத்துக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோருக்கு எதிராக ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நக்கீரன் அலுவலக ஊழியர்கள் பொன்னுசாமி உள்ளிட்ட 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
நக்கீரன் கோபால் மனு முடித்து வைப்பு - உயர்நீதிமன்றம் - naheeran gopal
சென்னை: ஆளுநர் அலுவலகத்துக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம், முடித்து வைத்தது.
![நக்கீரன் கோபால் மனு முடித்து வைப்பு - உயர்நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2695392-783-8e996523-bfe9-4610-b5a5-b1c95865af14.jpg)
சென்னை உயர்நீதிமன்றம்
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.